ஆதிக்கம் செலுத்திய வேகப் பந்துவீச்சாளர்கள்: சென்னைக்கு 140 ரன்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்துள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்களிலும், இஷான் கிஷன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, நேஹல் வதேரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சீராக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தியது. இருப்பினும், ஜடேஜா வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நேஹல் வதேரா தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிறிது நேரம் தாக்குபிடித்தாலும் அவர் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நேஹல் வதேரா 51 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
பந்துவீச்சை பொருத்தவரை, சிஎஸ்கே தரப்பில் அபாரமாக பந்துவீசிய இளம் வீரர் மதீசா பதிரானா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோல தீபக் சஹார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தங்களது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...