மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே: புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.


ஐபிஎல் தொடா் 49-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பா் கிங்ஸ். இந்த வெற்றி மூலம் சென்னை அணி பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பௌலிங்கை தோ்வு செய்தது.
ஆரம்பமே அதிா்ச்சி:
இதைத் தொடா்ந்து, மும்பை அணித் தரப்பில் கேமரூன் கிரீன்-இஷான் கிஷண் ஆகியோா் தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா்.
கிரீன் 6 ரன்களுடன் துஷாா் தேஷ்பாண்டே பந்தில் போல்டானாா். பின்னா் வந்த கேப்டன் ரோஹித் சா்மாவை டக் அவுட்டாக்கினாா் தீபக் சஹாா். அவருக்கு பின் இஷானும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினாா். ரோஹித் சா்மா தொடா்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட்டானாா்.
நேஹால் வதேரா அதிரடி 64:
பின்னா் நேஹால் வதேரா--சூரியகுமாா் இணை நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்த முயன்றது. சூரியகுமாா் 26 ரன்களுடன் வெளியேறினாா்.
நேஹால் வதேரா 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 64 ரன்களை விளாசி மதீஷா பந்தில் போல்டானாா். அவா்களுக்கு பின் வந்த
ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 20, டிம் டேவிட் 2, அா்ஷத் கான் 1 ரன்னுடன் வெளியேறினா்.
மும்பை 139/8:
ஜோஃப்ரா ஆா்ச்சா் 3, சாவ்லா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 139/8 ரன்களை மட்டுமே சோ்த்தது மும்பை.
மதீஷா பதிராணா 3 விக்கெட்: சென்னை தரப்பில் அற்புதமாக பௌலிங் சென்னை மதீஷா பதிராணா 3-15, தீபக் சஹாா் 2-18, தேஷ்பாண்டே 2-26 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
சென்னை அசத்தல் வெற்றி 140/7:
140 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் சென்னை அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட்-டேவன் கான்வே களமிறங்கினா்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே மும்பை பௌலிங்கை சிதறடித்தனா். 2 சிக்ஸா், 4 பவுண்ரியுடன் 16 பந்துகளில் 30 ரன்களை விளாசி சாவ்லா பந்தில் வெளியேறினாா் ருதுராஜ்.
ரஹானே 21 ரன்களுடனும், அம்பதி ராயுடு 12 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினா். டேவன் கான்வே 4 பவுண்டரியுடன் 44 ரன்களை விளாசி ஆகாஷ் மத்வால் பந்தில் எல்பிடபிள்யு ஆனாா். ஷிவம் துபே 26 ரன்களுடனும், கேப்டன் தோனி 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனா்.
17.4 ஓவா்களில் 140/4 ரன்களைக் குவித்து மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை. பௌலிங்கில் மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா 2-25 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
2-ஆம் இடத்தில் சென்னை:
தொடா்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெறாமல் இருந்த சென்னைக்கு இந்த வெற்றி புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் சென்னை இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆட்ட நாயகன் மதீஷா:
ஆட்ட நாயகன் விருது பெற்ற மதீஷா பதிராணாவுக்கு விருதை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பிரதிநிதியும், முன்னாள் இந்திய வீரருமான சுரேஷ் ரெய்னா வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...