நாளுக்கு நாள் புதிய புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி, நேற்றைய டி20 ஆட்டத்தின் மூலம் மற்றுமொரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் ஆடி வருகின்றன. தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் மொஹாலியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விஸ்வரூபத்தால் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியுற்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 149/5 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களைக் குவித்து வென்றது. 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இந்த ஆட்டத்துக்கு முன்பு, 65 இன்னிங்ஸில் 2369 ரன்கள் எடுத்திருந்தார் கோலி. 88 இன்னிங்ஸில், 2422 ரன்கள் எடுத்து அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றிருந்தார் ரோஹித் சர்மா. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா 12 ரன்களும் கோலி 72 ரன்களும் எடுத்தார்கள். இதனால் ரோஹித் சர்மாவைத் தாண்டி 2441 ரன்களுடன், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் கோலி. ரோஹித் சர்மா, 2434 ரன்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் 75 இன்னிங்ஸில் 2283 ரன்கள் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


