2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
1995-96-ல் பஞ்சாப் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார் தினேஷ் மோங்கியா. 2001-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான மோங்கியா, 57 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் ஒரு டெஸ்டிலும் விளையாட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்திய அணியின் முதல் சர்வதேச டி20 ஆட்டத்தில் இடம்பெற்ற மோங்கியா 38 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றாலும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர் மோங்கியா தான்.
2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதித் தோற்றது இந்திய அணி. இந்திய அணியில் கும்பிளேவை சேர்க்காமல் ஆல்ரவுண்டர் என்கிற காரணத்துக்காக மோங்கியாவை ஆட வைத்தார் கேப்டன் கங்குலி. பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 39 ரன்கள் கொடுத்தார் மோங்கியா. பேட்டிங்கில் 12 ரன்கள் மட்டும் எடுத்தார். பிசிசிஐயால் அங்கீகரிக்காத ஐசிஎல் அமைப்பில் சேர்ந்து விளையாடியதால் பிறகு மோங்கியாவால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பமுடியாமல் போனது. கடந்த வருடம் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட 42 வயது மோங்கியா, தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


