கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆஸி.க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:31 pm

Raghavendran

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. எனவே அடுத்து நடைபெறும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகின்றன. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு அடுத்த 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதுதொடர்பான மேல்முறையீடு விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆலிவியர் என்னும் இளம் ஆல்-ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு அனுபவ ஆல்-ரவுண்டரான கிறிஸ் மோரிஸும் இடம்பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், கடந்த 2017 ஜுலை இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் மோரிஸ் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு தடை தொடர்ந்தால் அவருக்கு பதிலாக மார்கல் இடம்பிடிக்கக்கூடும். இவர் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 

17 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:

டூ பிளெஸிஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, டெம்போ பவூமா, குயின்டன் டி காக், டி பிரையன், ஏபி டி வில்லியர்ஸ், டீன் எல்கர், ஹென்ரிச் க்ளாஸன், கேசவ் மகாராஜ், ஏய்டன் மர்கராம், மோர்னே மார்கல், வியான் முல்டர், லுங்கி நிகிடி, வெரோன் பிளாண்டர், காகிஸோ ரபாடா, ஆலிவியர், கிறிஸ் மோரிஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.