தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

2017 க்ளோப் ஸாக்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக ரொனால்டோ மீண்டும் தேர்வு!

2017-ம் ஆண்டுக்கான க்ளோப் ஸாக்கர் சிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ, வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:28 pm

Raghavendran

2017-ம் ஆண்டுக்கான க்ளோப் ஸாக்கர் விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மார் ஆகியோரைக் கடந்து பொர்ச்சுகல் நாட்டின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிறந்த வீரராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதில், கிளப் கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் பல விருதுகளைத் தட்டிச் சென்றது. அந்த அணியே 2017 க்ளோப் ஸாக்கர் சிறந்த அணிக்கான விருதை தட்டிச் சென்றது.

அந்த அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பயிற்சியாளர் விருதும் ரியல் மாட்ரிட் அணியின் ஸினேடின் ஸிடானுக்கு வழங்கப்பட்டது.

2017-ல் உலகளவில் சிறந்த லீக் தொடருக்கான விருது லாலிகா பெற்றது. பார்சிலோனாவைச் சேர்ந்த முன்னாள் தடுப்பாட்ட வீரர் கார்லஸ் பியோல் மற்றும் டாட்டி கிளப் ஆஃப் ரோமா அணியின் ப்ரான்ஸிஸ்கோ ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.