சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் பிரஃபுல் ஹிங்கேவின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்வோர் எண்ணிக்கை ஒரே இரவில் 8,000-ல் இருந்து 3 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல் அணிகள் நேற்றிரவு ஹைதராபாத் திடலில் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஹைதராபாத் அணிக்காக நேற்று களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஃபுல் ஹிங்கே, முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
இரண்டாவது பந்தில் அதிரடி பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி, நான்காவது பந்தில் துருவ் ஜுரேல் மற்றும் கடைசிப் பந்தில் பிரிட்டோரியாஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து அவரது இரண்டாவது ஓவரில் கேப்டன் ரியான் பராக்கையும் அவுட்டாக்கினார்.
முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் அணியின் அதிரடி டாப் ஆர்டர் பேட்டர்களை அடுத்தடுத்து அவுட்டாக்கி அனைவரையும் ஆச்சரிப்படுத்திய பிரஃபுல் ஹிங்கே பேசுபொருளானார்.
இந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்தொடர்வோர் எண்ணிக்கை நேற்றிரவு 8,854 -ஆக இருந்த நிலையில், இன்று காலை 3.2 லட்சமாக உயர்ந்துள்ளது.
ராஞ்சி கோப்பை தொடரில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் பிரஃபுல் ஹிங்கேவை ரூ. 30 லட்சத்துக்கு ஹைதராபாத் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Intagram
Summary
From 8,000 to 3 Lakhs! Sunrisers' Prabhulin's Followers Skyrocket Overnight!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றி ஹைதராபாதுக்கான திருப்பு முனை: டேல் ஸ்டெயின்
ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!

எழுதி வைத்ததை எட்டிவிட்டேன்! - பிரஃபுல் ஹிங்கே

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


