முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

சன்ரைசரஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சன்ரைசரஸ் அணியின் கேப்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...

News image

சன்ரைசரஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். - படம்: ஏபி

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாததால் ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு அபராதம் வித்தித்துள்ளது.

நேற்றிரவு (மே.12) நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 168/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 14.5 ஓவர்களில் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் பின் தங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி மெதுவாகப் பந்துவீசியதால் அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதி 2.22ன் படி கம்மின்ஸுக்கு இந்த சீசனில் முதல்முறை என்பதால் குறைந்தபட்சமாக ரூ.12 லட்சம் அபராதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சன்ரைசர்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக இருந்த இஷான் கிஷனுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

SRH captain Cummins fined for slow over rate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.