தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வு

வணிக சிலிண்டர்கள் விலை உயர்வால் மே 5 முதல் விடுதிக் கட்டணங்களும் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு

News image

விடுதிக் கட்டணங்கள் உயர்வு - பிரதிப் படம்

Updated On :2 மே 2026, 0:59 pm IST

வணிக சிலிண்டர்கள் விலை உயர்வால் விடுதிக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது. ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர்களின் விலை உயர்வையடுத்து, தமிழ்நாட்டில் விடுதிகள் கட்டணத்தை மே 5 முதல் உயர்த்துவதாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தக் கட்டண உயர்வின்படி, 4 பேர் தங்கும் ஏசி அல்லாத அறைக்கு ரூ. 6,500 - ரூ. 7,500 வரையிலும், 3 பேர் தங்கும் அறைக்கு ரூ. 7,000 - ரூ. 8,000 வரையிலும், 2 பேர் தங்கும் அறைக்கு ரூ. 8,000 - ரூ. 9,000 வரையிலும், ஏசி அறைகள் என்றாலோ விடுதிகளில் இருக்கும் கூடுதல் வசதிகளைப் பொறுத்து, கட்டணங்களில் மாற்றம் இருக்கக் கூடும் என்றும் கூறியுள்ளனர்.

விடுதிகளின் கட்டண உயர்வால், வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மற்றும் பணிபுரிவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Summary

Paying Guest Fees Skyrocket Due to Cylinder Prices

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.