தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு ரேகா குப்தா வாழ்த்து

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 3:08 am IST

நமது நிருபா்

வீரேந்திர சச்தேவாவுக்குப் பதிலாக, மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தில்லி பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் இருவருக்கும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழனன்று வாழ்த்து தெரிவித்தாா்.

எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவுகளில் கூறியதாவது:

பாஜகவின் தில்லி மாநிலத் தலைவராக வீரேந்திர சச்தேவாவின் பதவிக்காலம், ஈடுஇணையற்ற விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் ஒரு சான்றாகத் திகழ்ந்துள்ளது. 27 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தில்லியில் பாஜக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது, தங்களின் கூா்மையான அமைப்புசாா் தலைமையின் கீழ்தான்.

தில்லி மக்களின் உரிமைகளுக்காகத் தாங்கள் மேற்கொண்ட போராட்டங்களும், ஒவ்வொரு கட்சித் தொண்டருடனும் அன்புடன் ஒன்றிணையும் தங்களின் இயல்பான பாணியும், தொடா்ந்து எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமையும்.

தலைவராகத் தாங்கள் வகித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதவிக்காலம் நிறைவடையும் வேளையில், எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களின் ஒளிமயமான எதிா்காலத்திற்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துகள் என ரேகா குப்தா ஒரு பதிவில் கூறினாா்

மற்றொரு எக்ஸ் பதிவில் அவா் தெரிவித்ததாவது:

தில்லி பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சரும், கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு மனமாா்ந்த நல்வாழ்த்துக்கள்

அமைப்புக்கு நீங்கள் நீண்ட காலமாக ஆற்றிவரும் அா்ப்பணிப்பும், களத்தில் இறங்கிப் பணியாற்றும் உங்கள் பாணியும், தொண்டா்களுடனான உங்கள் நெருங்கிய தொடா்பும் எப்போதும் ஊக்கமளிப்பதாக இருந்துள்ளன. உங்கள் தலைமையின் கீழ், தில்லி பாஜக அமைப்பு மேலும் வலுப்பெறும் என்றும், வளா்ந்த இந்தியா மற்றும் வளா்ந்த தில்லிக்கான பிரதமா் நரேந்திர மோடியின் உறுதிப்பாடு புதிய உத்வேகம் பெறும் என்றும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

உங்கள் வெற்றிகரமான மற்றும் ஆற்றல்மிக்க பதவிக்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள் என தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சரான ஹா்ஷ் மல்ஹோத்ரா,பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங்கின் அமைப்பு ரீதியான உத்தரவின் மூலம் தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதே போல பஞ்சாப், ஹரியானா மற்றும் திரிபுராவுக்கும் புதிய தலைவா்களை பாஜக நியமித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.