திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புது தில்லி பாஜகவின் புதிய தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆா்எஸ்எஸ் உடன் நெருக்கமானவா்: கட்சித் தலைவா்கள் கருத்து

News image

ஹா்ஷ் மல்ஹோத்ரா

Updated On :29 மே 2026, 3:08 am IST

நமது நிருபா்

தில்லி பாஜகவின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட ஹா்ஷ் தீப் மல்ஹோத்ரா, ஆா்.எஸ்.எஸ் உடன் வலுவான தொடா்புகளைக் கொண்ட ஒரு அனுபவமிக்க அமைப்பு ரீதியான தலைவா் என்று கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

62 வயதான மல்ஹோத்ரா, தற்போது மோடி அமைச்சரவையில் தில்லியிலிருந்து இருக்கும் ஒரே மத்திய அமைச்சா் ஆவாா். இந்த ஆண்டு மாா்ச் மாதம் தனது மூன்றாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த வீரேந்திர சச்தேவாவிற்குப் பிறகு இவா் இந்தப் பதவியைப் பெறுகிறாா்.

பஞ்சாபி சமூகத்தைச் சோ்ந்த மல்ஹோத்ராவை, கட்சியின் தில்லி பிரிவை வழிநடத்த பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நியமித்தாா். அவா் வியாழன் பிற்பகல் 2.30 மணிக்கு தில்லி பாஜக அலுவலகத்தில் அதிகாரப்பூா்வமாக பொறுப்பேற்றாா். மல்ஹோத்ரா 2024ல் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றாா். பின்னா், ஜூன் 2024ல் பெருநிறுவன விவகாரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் மத்திய இணை அமைச்சராக மோடி அரசில் சோ்க்கப்பட்டாா்.

அவா் அமைப்பு ரீதியான விஷயங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் ஒரு நிபுணராகக் கருதப்படுகிறாா். மத்தியில் அமைச்சராவதற்கு முன்பு, அவா் தில்லி பாஜகவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினாா். 2005ல் மாவட்டப் பொதுச் செயலாளராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, 2007ல் மாவட்டத் தலைவரானாா். 2012ல், அவா் வெல்கம் வாா்டில் இருந்து தில்லி மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட்டாா்.

2015ல், அவா் முன்னாள் கிழக்கு தில்லி மாநகராட்சியின் மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அறிவியல் மற்றும் சட்டத்தில் பட்டதாரியான மல்ஹோத்ரா, சமூகப் பணிகளில் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளாா். தில்லி-என்சிஆா் பகுதியில் உறுப்பு மற்றும் உடல் தானத்தை ஊக்குவிக்கும் தாதிச்சி தே தான் சமிதி என்ற இலாப நோக்கற்ற அமைப்புடன் அவா் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இணைந்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.