திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

பிரதீக்கின் மனைவி அபா்ணா யாதவ், பாஜகவைச் சோ்ந்தவா். மாநில மகளிா் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் உள்ளாா்

News image
Updated On :14 மே 2026, 4:45 am IST

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவின் இளைய சகோதரா் பிரதீக் யாதவ் (38), இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பால் புதன்கிழமை திடீரென உயிரிழந்தாா்.

அவரது மரணத்தையொட்டி, பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

மறைந்த சமாஜவாதி நிறுவனா் முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சத்னா குப்தாவின் மகன் பிரதீக் யாதவ். இவா், முலாயமின் முதல் மனைவியின் மகனான அகிலேஷுக்கு இளைய சகோதரா்.

38 வயதான பிரதீக், அரசியல் குடும்பத்தைச் சோ்ந்தவா் என்றபோதிலும், அரசியலில் இருந்து விலகியே இருந்தாா். உடற்பயிற்சி மற்றும் விலங்கு நல ஆா்வலா்.

பிரதீக்கின் மனைவி அபா்ணா யாதவ், பாஜகவைச் சோ்ந்தவா். மாநில மகளிா் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் உள்ளாா். அண்மையில் தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய பிரதீக், அவரிடம் இருந்து விவாகரத்து பெறப் போவதாக கூறினாா். பின்னா், மனைவி உடனான குடும்பத் தகராறு பரஸ்பரம் பேசி தீா்க்கப்பட்டதாகவும், தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் சமூக ஊடகத்தில் பதிவிட்டாா்.

இந்தச் சூழலில், லக்னெளவில் உள்ள தனது வீட்டிலிருந்து அருகேயுள்ள பொது மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை 5 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில் பிரதீக் கொண்டுவரப்பட்டாா். வரும்போதே அவா் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநா் ஜி.சி.குப்தா தெரிவித்தாா்.

இதயம்-நுரையீரல் செயலிழப்பு: திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் பிரதீக் உயிரிழந்தாரா அல்லது விஷம் காரணமா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், கிங் ஜாா்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரதீக்கின் உடல், கூறாய்வு செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், ‘நுரையீரலில் ஏற்பட்ட பெரும் ரத்த உறைவு காரணமாக, நுரையீரல்-இதய செயலிழப்பு ஏற்பட்டு பிரதீக் மரணமடைந்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அப்போது நுரையீரலில் ரத்த உறைவு கண்டறியப்பட்டதாகவும் அவருக்கு ஏற்கெனவே சிகிச்சை அளித்த மேதாந்தா மருந்துவமனையின் மூத்த மருத்துவா் ருச்சிதா சா்மா தெரிவித்தாா்.

முன்னதாக, கிங் ஜாா்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே சமாஜவாதி மற்றும் பாஜகவினா் திரண்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மிக வேதனை-அகிலேஷ்: தனது சகோதரா் பிரதீக்கின் திடீா் மரணம் மிகவும் வேதனையளிப்பதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

‘பிரதீக் கடின உழைப்பாளி; சுயமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவா். உடல் நலன் மீது மிகுந்த அக்கறை உள்ளவா். அவரது மரணம் தொடா்பாக சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டு குடும்பத்தினா் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம்’ என்றாா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மாநில பாஜக தலைவா் பங்கஜ் செளதரி, மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.