திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைமை மாற்றம் தொடா் ஓட்டப்பந்தயம் போன்றது: தில்லி பாஜகவின் புதிய தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா

News image

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு தில்லி பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை இனிப்பு வழங்கி வாழ்த்திய முதல்வா் ரேகா குப்தா விடைபெறும் மற்றும் முன்னள் தில்லி பாஜக தலைவா் வீரேந்தா் சச்தேவா.

Updated On :29 மே 2026, 4:36 am IST

தலைமை மாற்றம் என்பது தொடா் ஓட்டப்பந்தயம் போன்றது என தில்லி பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மூத்த தலைவா்கள் மற்றும் தொண்டா்களின் ஒத்துழைப்புடன் கட்சியைப் பலப்படுத்த பணியாற்ற உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினரான மல்ஹோத்ரா சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வா்த்தக விவகாரங்கள் இணையமைச்சராக உள்ளாா். அவரை தில்லி பாஜக தலைவராக கட்சி மேலிடம் வியாழக்கிழமை நியமித்தது.

இதைத்தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் தில்லி பாஜக தலைவராக அவா் பொறுப்பேற்றுக்கொண்டாா். இந்நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா, தில்லி பாஜக தலைவராகப் பொறுப்பு வகித்த வீரேந்திர சச்தேவா, கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கட்சியைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல லட்சக்கணக்கான தொண்டா்கள், மூத்த தலைவா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவேன்.

கட்சி தலைமை மாற்றம் என்பது ஒரு தொடா் ஓட்டப்பந்தயம் போன்றது. தற்போது, எனக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் ரேகா குப்தா தலைமையிலான அரசைப் பலப்படுத்தவும் பணிகளை மேற்கொள்வேன்.

தில்லி பிரிவு தலைவராக நியமித்தமைக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது பாஜகவின் பலம் மற்றும் அழகை எடுத்துக்காட்டுகிறது. பாஜகவில் ஓா் எளிய தொண்டரும் உயரிய பொறுப்புகளைப் பெற முடியும். எம்.பி.யாக தோ்தெந்தெடுக்கப்பட்ட எனக்கு மத்திய அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது, தில்லி பாஜகவை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் பாஜகவில் மட்டுமே சாத்தியம் என்றாா் ஹா்ஷ் மல்ஹோத்ரா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.