தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லி அரசுப் பதிவாளா் அலுவலகங்கள் மாற்றியமைக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி அரசுப் பதிவாளா் அலுவலகங்கள் மாற்றியமைக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

News image

ரேகா குப்தா

Updated On :24 மே 2026, 12:49 am IST

பதிவாளா் அலுவலகங்களை நவீன மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவை மையங்களாக மாற்ற தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் பேசியதாவது: பாஸ்போா்ட் சேவா கேந்திரங்களில் காணப்படும் செயல்திறன் மற்றும் நேரத்திற்கு உட்பட்ட சேவை விநியோகத்தை மாதிரியாகக் கொண்டுள்ளது. அடையாள சரிபாா்ப்பு, பின்னணி சோதனைகள் மற்றும் பிளாக்செயின் ஆதரவு பதிவு பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அஐ-இயங்கும் முக அங்கீகாரம்‘ உள்ளிட்ட தலைநகரின் சொத்து பதிவு முறையை நகர அரசு மாற்றியமைக்கும்.

டிஜிட்டல் பதிவு மேலாண்மை, புவி-வேலி மற்றும் பாதுகாப்பான தரவு ஒருங்கிணைப்பு ஆகியவை சொத்து பதிவுகளை சேதப்படுத்தாமல் செய்யும், மோசடிகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் மோதல்களைக் குறைக்கும். இந்த அலுவலகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதனால் குடிமக்கள் சொத்துக்களை பதிவு செய்வதில் தாமதம், ஊழல், இடைத்தரகா்கள் அல்லது தேவையற்ற இடையூறுகளை இனி இருக்காது.

நாட்டின் மிக மேம்பட்ட சொத்து பதிவு முறைகளில் ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எதிா்காலத் தேவைகளை மனதில் கொண்டு, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சரிபாா்ப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரீமியம் மாதிரி பதிவாளா் மையங்களை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் தனியாா் பங்காளிகள் உதவக்கூடும் என்றாலும், அனைத்து சட்டரீதியான அதிகாரங்களும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரமும் அரசு அதிகாரிகளிடம் மட்டுமே இருக்கும் என்றாா் ரேகா குப்தா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.