17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியது குறித்து...

News image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 7:48 pm IST

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகத்திலும் சோதனை செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் ஜோசப் விஜய் நாளை(திங்கள்கிழமை) திருச்சி வரவிருக்கும் நிலையில், ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

There was a lot of commotion at the Trichy District Collectorate after a bomb threat was made.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.