தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை வடபழனியில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனை செய்தனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் (கோப்புப்படம்)

Updated On :9 மே 2026, 1:20 am IST

சென்னை வடபழனியில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனை செய்தனா்.

வடபழனி ஆற்காடு சாலை பானுமதி தெருவில் மண்டல பாஸ்போா்ட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, ஒரு மின்னஞ்சல் வியாழக்கிழமை இரவு வந்தது.

அதில் அந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்து பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த அலுவலக ஊழியா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த கே.கே.நகா் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு சோதனையிட்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.