திருச்சுழி அருகே ஒடும் பேருந்தில் பெண்ணிடம் நகை, ரொக்கம் திருட்டு
திருச்சுழி அருகே ஓடும் பேருந்தில் 3 சவரன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவைகளை திருடிச் சென்றதாக நரிக்குடி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு பெண் ஒருவர் புகார் செய்தார்.


திருச்சுழி அருகே ஓடும் பேருந்தில் 3 சவரன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவைகளை திருடிச் சென்றதாக நரிக்குடி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு பெண் ஒருவர் புகார் செய்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர் பொன்னுநாயக்கரின் மனைவி சின்னாக்காள்(50). இவர் திங்கள்கிழமை அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையிலுள்ள தனியார் நூற்பாலை உணவு விடுதி நடத்தி வரும் தனது மகன் மற்றும் மகளை பார்ப்பதற்காக வந்தாராம். அதன் பின் இங்கிருந்து இரவில் அரசு பேருந்து ஏறி தனது சொந்த கிராமமான அகத்தாகுளம் சென்றாரம். அப்போது, இடையே மஞ்சள் பையில் வைத்திருந்த பணப்பையில் 3 சவரன் நகை மற்றும் மகளிர் குழு கடன் தொகை ரூ.7 ஆயிரம் ஆகியவைகளுடன் காணமல் போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னாக்காள் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஒடும் பேருந்தில் பணப்பையை திருடிய மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...