முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே இளைஞர் தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே இளைஞர் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சனிக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:56 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இளைஞர் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சனிக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் சிவசங்கரன்(18). இவர் தனது தந்தை நடத்தும் சலூன் கடையில் உதவியாக வேலை பார்த்து வந்தாராம். இந்நிலையில் சிவசங்கரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வேலைக்கு செய்யாமல் இருந்தாதால் வேல்முருகன் கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சிவசங்கரன் கடந்த 5 நாள்களுக்கு முன்பு வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக் கொண்டாராம். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.