மேற்குறிப்பிட்ட பகுதியில் குடியிருந்து மாவு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகிறேன். எனது தோழி உஷாராணியின் மூலம் மேட்டமலையில் குடியிருந்து வரும் மந்திரவாதி எம்.சுப்பிரமணியன் குறித்து அறிந்தேன்.அவர் பழைய நிகழ்வுகளை எல்லாம் கூறுவதாகவும், மந்திர சக்தியால் பணம் வரவழைப்பதாகவும் கூறினாராம். தற்போது, அவரது மகன் உடல் நலமின்றி அருப்புக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளார். அதனால் சாமியார், அவரது மனைவிக்கு மதிய உணவு தயார் செய்து தரும்படி கேட்டுக் கொண்டாராம். அவர்களின் சிரமத்தை அறிந்து தயார் செய்து கொடுத்தேன்.