குழந்தைகள் நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர், இளைஞர் நீதிக்குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினராக நியமிக்கப்படுவர்கள் அங்கிகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல், உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், மனையியல், கல்வி, அரசியல் அறிவியல், பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி சட்டம் மற்றும் மருத்துவம் போன்றவைகளில் பட்டம் பெற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான படிவத்தை http:/www.tn.gov.in/deparments/30 என்ற இணையதளத்திலிருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்தோர் மேற்குறிப்பிட்ட பதவிக்கான படிவத்தை பூர்த்தி செய்து ஆணையர், சமூக பாதுகாப்புத்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600010 என்ற முகவரிக்கு 15 நாள்களுக்குள் கிடைக்கும்மாறு அனுப்பி வைக்க வேண்டும்.