இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், கோட்டாட்சியர் உதயகுமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, விருதுநகர் வட்டாட்சியர் சிவஜோதி, தனி வட்டாட்சியர்(தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில்) ஜெயந்தி, தொழிற்சாலை பாதுகாப்பு துறை ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர் வெடி விபத்து நடந்த ஆலைக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும்,இந்த விபத்து தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் பட்டாசு ஆலையை நடத்தி வரும் முத்துராமலிங்கம்-ராமர் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.