கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை சம்பவம்: விருதுநகர் நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

மதுரை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி கொலை செய்து கொடைக்கானல் பள்ளத்தாக்கில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில் 2 பேர் செவ்வாய்கிழமை விருதுநகர் ஜே.எம்.2

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:43 am

எஸ். பாண்டியன்

மதுரை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி கொலை செய்து கொடைக்கானல் பள்ளத்தாக்கில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில் 2 பேர் செவ்வாய்கிழமை விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் ஜமால் முகமது(61). இவர் அப்பகுதியில்  ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வந்தார். கடந்த சிலநாள்களுக்கு முன்பு இவர் திடீரென மாயமானாது தொடர்பாக அவரது உறவினர்கள் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர் சம்பவம் தொடர்பாக மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் மேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாராம். அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்ததில் கொலை செய்து சடலத்தை கொடைக்கானல் மலைப்பகுதி பள்ளத்தாக்கில் வீசியதாகவும், அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் தெரிவித்தாராம்.

அதன் அடிப்படையில் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக மதுரை கூடல்புதூர் தமிழ்நாடு வீ்ட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்சா என்பவரின் மகன் சித்திக்(36), கூடல் நகரில் தமிழ் நகரைச் சேர்ந்த காமாட்சி என்பவரின் மகன் மாரிமுத்து(37) ஆகியோர் விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதை விசாரித்த நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் உடனே இருவரையும் 15 நாள்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.