கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பல்வேறு கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி அருந்தமிழர் விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் அருந்ததியர் மக்களின் அடிப்படை பிரச்னை தொடர்பான கோரிக்கைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அருந்தமிழர் விடுதலை இயக்கத்தினர் திங்கள்கிழமை கண்டன

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:43 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் அருந்ததியர் மக்களின் அடிப்படை பிரச்னை தொடர்பான கோரிக்கைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அருந்தமிழர் விடுதலை இயக்கத்தினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சு.வசந்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ச.பெருமாள் முன்னிலை வகித்தார். அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கு.ஜக்கையன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில், சோலைச்சேரியில் அருந்ததியர் மக்களுக்கு குடிநீர், கழிப்பறை, வாறுகால் பிரச்னையை தீர்க்க வேண்டும். சேத்தூரில் இம்மக்களின் குடியிருப்புக்கு அருகே உள்ள அரசு மதுபானக் கடையை உடனே அகற்ற வேண்டும். ராஜபாளையம் பொம்மியம்மன் நகர் கோவில் இடத்தை அருந்ததியினர் மக்களுக்கு பட்டா முடித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் மரியதாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஞானகுரு, மாவட்ட செயலாளர் சேகர், மகளிரணி தலைவி பெருமாளம்மாள் உள்ளி்ட்ட அருந்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.