ஆட்சியர் அலுவலக பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதுபோல் அலுவலகத்திற்கு வருகிற பொதுமக்கள் அனைவரும்


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதுபோல் அலுவலகத்திற்கு வருகிற பொதுமக்கள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மரக்கன்றுகள், செடிகொடிகள், தரைபுற்கள், நடந்து செல்லும் வகையில் தரைதளம், வண்ண விளக்குகளுடன் கூடிய நீருற்று மற்றும் சிலை வடிவமைப்புகளுடன் பூங்கா செயல்பட்டு வந்தது. இதை இங்கு வரும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. அதனால் இயற்கை அழகை பூங்கா இழந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பூங்காவில் உள்ள மரக்கன்றுகள் மற்றும் புற்களுக்கு தண்ணீர் ஊற்றாத காரணத்தால் கருகி வருகிறது. அதனால் மாவட்ட நிர்வாகம் மீண்டும் பூங்காவை சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...