கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

விருதுநகர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரின் மகள் தனப்பிரியா(15). இவர் அருகில் உள்ள ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்,

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:40 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

விருதுநகர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரின் மகள் தனப்பிரியா(15). இவர் அருகில் உள்ள ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றாராம். அங்கு ஆங்கில பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் பாடத்தை ஒழுங்காக படிக்கவில்லையெனக் கூறி மாணவியை திட்டியதோடு, வகுப்பறைக்கு வெளியே நிற்கும் படி கூறினாராம்.

இதனால் மனம் உடைந்த மாணவி, மதியத்திற்கு மேல் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு யாரும் இல்லையென்பதை அறிந்த மாணவி விஷ எலிமருந்தை உட்கொண்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் பார்த்து உடனே மாணவியை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது, அம்மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பூமிநாதன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.