அதன் அடிப்படையில் நத்தம்பட்டி காவல் நிலையம், அல்லம்பட்டி முக்குரோடு, விருதுநகர் முக்குச்சாலை, காரியாபட்டி நகர், ஆவியூர் காவல் நிலையம், ராமலிங்கா மில்ஸ், பந்தல்குடி காவல் நிலையம், சாத்தூர் வெங்கடாஜலபுரம், திருத்தங்கல் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில், ராஜபாளையம் வன்னியம்பட்டி விலக்கு உள்ளிட்ட இடங்களில் காவல் துறையின் சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது.அதோடு, வாகனங்களில் ஒலிபெருக்கி, சாதி கட்சி கொடிகள் கட்டிக் கொண்டு செல்லக் கூடாது. ஆயுதங்கள் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது. மூடப்பட்ட வேன், கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். வாகனங்கள் மேலே அமர்ந்து செல்வதற்கு அனுமதியில்லை. அன்றைய நாளில் இம்மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு செல்லும் நபர்கள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் எழுத்து மூலமாக தகவல் தெரிவித்தால் வாகன அனுமதி சீட்டுக்கள் வழங்கவும், காவல் துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.