விருதுநகரில் அனுமதியின்றி வெடிபொருள்களை பதுக்கியதாக 3 பேர் கைது
விருதுநகர் அருகே கல்குவாரிகளில் எல்க்ட்ரிக் டெட்டனேட்டர், ஜெலட்டின் உள்ளிட்ட வெடி பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக சூலக்கரை...


விருதுநகர் அருகே கல்குவாரிகளில் எல்க்ட்ரிக் டெட்டனேட்டர், ஜெலட்டின் உள்ளிட்ட வெடி பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக சூலக்கரை போலீஸார் பறிமுதல் செய்ததோடு 3 பேரையும் கைது செய்தனர்.
விருதுநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக எல்கெட்ரிக் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடியுப்புகளை ஆகியவைகளை பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சூலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் அப்பாத்துரை தலைமையில் சூலக்கரை மேற்கு பகுதியில் உள்ள பல்வேறு கல்குவாரிகளில் திங்கள்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
அதில், ஒரு கல்குவாரியில் அனுமதியில்லாமல் கூடுதலாக 18 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர், 18 ஜெலட்டின் குச்சிகள், 1 கிலோ வெடியுப்பு உள்ளிட்ட வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் வெடிபொருள்கள் உடனே பறிமுதல் செய்தனர். இது சூலக்கரையைச் சேர்ந்த உரிமையாளர் பிச்சைமுத்து, சென்னல்குடியைச் சேர்ந்த ரத்தினம் மற்றும் திண்டுக்கல் வேலமுருகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...