கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு 7 குரூப் சிம்கார்டுகள் வழங்கும் திட்டம்

காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 குரூப் சிம்கார்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்காக தேவை பட்டியல் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:19 am

எஸ். பாண்டியன்

காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 குரூப் சிம்கார்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்காக தேவை பட்டியல் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் காவல் துறையில் தொலைத் தொடர்பு நவீனமயமாக்கும் திட்டம் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஏற்கனவே அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஆன்லைனில் கணினி மூலம் வழக்கு விவரங்களை பதிவேற்றம் செய்தல், வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பற்றி  கைரேகையுடன் பதிவேற்றம் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் காவல் துறையில் பணியாற்றும் எஸ்.பி முதல் காவலர்கள்   வரையிலான அனைவருக்கும் பி.எஸ்.என்.எல் குரூப் சிம்கார்டு வழங்கும் திட்டத்தை அரசு மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 48 காவல் நிலையங்களில் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 2800 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 7 குரூப் சிம்கார்டுகள் வழங்கப்பட இருக்கிறது.

காவலர்கள் பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்போது, அவர்கள் குடும்பத்தினருடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதைக் கருத்திற் கொண்டு காவலர்களும் எந்த இடத்திலிருந்து உடனுக்கு உடன் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த தாய், த்ந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் மனைவி ஆகியோருடன் பேசும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குரூப் சிம்கார்டுகள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கு முன்பு காவலர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு மாத கட்டணமாக ரூ.247 மட்டும் அரசு செலுத்தி வந்தது. அதை காவல் துறையினருடன் மட்டும் தொடர்பு கொண்டு பேச முடிந்தது. தங்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் பேசுவதற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டது.

இதைக் கருத்திற் கொணடு போலீஸாரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் 7 சிம்கார்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஒரு சிம்கார்டுக்கு மட்டும் மாதந்தோறும் ரூ.30 பிடித்தம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல், ஆண்டு வாடகை ரூ.264ஐ அரசு செலுத்தும். இதன் மூலம் காவல் துறையினர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் கட்டணமில்லாமல் தொடர்பு கொண்டு பேசலாம். இதில், எத்தனை பேருக்கு சிம்கார்டுகள் தேவை என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக  காவல் துறையினர் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.