முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் 26-ம் தேதி நடைபெறுகிறது: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்

விருதுநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் வருகிற 26-ம் தேதி மாலையில் தொடங்கி

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:13 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் வருகிற 26-ம் தேதி மாலையில் தொடங்கி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுகவின் மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்திருப்பதாவது:

இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.பி.எஸ்.பாண்டியன் தலைமை வகிக்க இருக்கிறார். அதோடு, நான் மற்றும் மாநில நெசவாளர் அணித் தலைவரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம்தென்னரசு ஆகியோர் பங்கேற்கிறோம். இதில் முக்கியமாக பிப்.15,16ல் திருச்சியில் 10-வது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும். அதேபோல், வருகிற மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளின் ஆலோசனை கருத்துக்களையும் கேட்டறிதல் உள்ளிட்டவைகள் நடைபெற இருக்கிறது.

இம்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பிற அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.