இதற்கு முன்பாக குழந்தைத் தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்கவும், குழந்தைத் திருமணங்களை தடுத்திடவும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் மூலம் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 27-ம் தேதி முதல், தொடர்ந்து 31-ம் தேதி வரையில் குழந்தைகள் குறும்பட திரைப்பட விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில், குழந்தைகளின் உரிமைகள், கல்வி, பாதுகாப்பு, குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நற்சிந்தனைகள், குழந்தை திருமணத்தின் விளைவுகள், சுற்றுச்சூழல், எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய 7 குறும்படங்கள் திரையிடப்பட இருக்கிறது.