முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே அச்சுப் பயிற்சி கல்லூரியில் கணிப்பொறி பொருள்கள் திருட்டு

விருதுநகர் அருகே பூட்டியிருந்த அச்சுப்பயிற்சி கல்லூரியின் பின்புறம் ஜன்னல் கதவை உடைத்து கணிப்பொறிகள் மற்றும் அதற்குரிய பொருள்கள் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:12 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பூட்டியிருந்த அச்சுப்பயிற்சி கல்லூரியின் பின்புறம் ஜன்னல் கதவை உடைத்து கணிப்பொறிகள் மற்றும் அதற்குரிய பொருள்கள் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே ஆமத்தூரில் தனியார் அச்சு பயிற்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் செவ்வாய்கிழமை கல்லூரி இயங்கியது. அதையடுத்து மாலையில் வகுப்பறை மற்றும் கணிப்பொறி அறை உள்ளிட்டவைகளை அலுவலர்கள் பூட்டி வீட்டு சென்றனர். அதேபோல், மறுநாள் புதன்கிழமை காலையில் கல்லூரியை திறந்தனர். அதையடுத்து, கணிப்பொறி அறையை திறந்து பார்க்கும் போது பின்புற ஜன்னல் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் கணிப்பொறி, மடிக்கணினி ஆகியவைகளுக்கு பயன்படுத்தும் கார்டு டிஸ்க், சி.டி.டிரைவ் மற்றும் மௌஸ் உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தனியார் அச்சுப் பயிற்சி கல்லூரியின் முதல்வர் பாலகணபதி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கணிப்பொறி பொருள்கள் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.