முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 6 பேர் மீது வழக்கு பதிவு: பட்டாசு பொருள்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே அனுமதியின்றி கருந்திரி தயாரிக்க வைத்திருந்த வெடிபொருள்களையும், கருந்திரி கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:11 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி கருந்திரி தயாரிக்க வைத்திருந்த வெடிபொருள்களையும், கருந்திரி கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம், ஒன்டிப்புலிநாயக்கனூர், ஓ.கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி காட்டுப் பகுதியில் கருந்திரி தயாரித்து வருவதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் செவ்வாய்கிழமை சூலக்கரை காவல் ஆய்வாளர் அப்பாத்துரை தலைமையில் போலீஸார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது, ஒன்டிப்புலிநாயக்கனூர் கிராம காட்டுப் பகுதி வழியாக சென்றனர்.

அப்போது, அங்கிருந்த தென்னங்குடில் பகுதியிலிருந்து போலீஸாரை பார்த்ததும் ஓடி முயற்சி செய்த போது சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை பிடித்த போலீஸார் விசாரணை செய்ததில் அருகில் உள்ள ஓ.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி(41), ரவி(34), வீரபத்திரன்(35) மற்றும் காந்தி(37) என்பது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி தயார் செய்வதற்காக வைத்திருந்த கரிமருந்து, டெக்டான் பவுடர் மற்றும் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், அனுமதியின்றி கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சங்கரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், பூமிநாதன் உள்ளி்ட்டோரிடமிருந்து சல்பர், கரிமருந்து, அலுமினிய பவுடர், டெக்டான் பவுடர் உள்ளிட்ட வெடி மருந்துகளையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.