முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றங்கள் புறக்கணிப்பு

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குறைஞர்களை மட்டுமே நீதிபதிகளாக தேர்வு செய்து வருகின்றனர். அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வழக்குரைஞர்களையும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:04 am

எஸ். பாண்டியன்

உயர்நீதிமன்ற 12 நீதிபதிகளின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகரில் வழக்குரைஞர்களின் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை நீதிமன்றங்களை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குறைஞர்களை மட்டுமே நீதிபதிகளாக தேர்வு செய்து வருகின்றனர். அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வழக்குரைஞர்களையும் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடத்திற்கு தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.தற்போது, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 12 பேரின்  நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வழக்குகள் விசாரணை நடைபெறாமல் இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.