இளம்பெண்ணிடம் செல்போன் எண் கேட்டவருக்கு அடி உதை
விருதுநகரில் உள்ள அய்யனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் மாலா(20). இவர் வியாழக்கிழமை மாலையில் மதுரை சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது,


விருதுநகரில் நின்றிருந்த இளம்பெண்ணிடம் செல்போன் எண் கேட்ட இளைஞருக்கு அடி உதை விழுந்தது.
விருதுநகரில் உள்ள அய்யனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் மாலா(20). இவர் வியாழக்கிழமை மாலையில் மதுரை சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, பாவாலி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் ரஞ்சித்குமார்(20). மாலாவிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அதை விரும்பாத நிலையில் கைப்பேசி எண்ணையும் கேட்டாராம். இது தொடர்பாக அப்பகுதியில் நின்றிருந்த தனது உறவினர்களிடம் தெரிவித்தார்.
உடனே விரைந்து வந்த உறவினர்கள் 6 பேர் சேர்ந்து ரஞ்சித்குமாரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் இளம்பெண் உறவினர்களான குருராஜ், சின்னப்பதாஸ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...