விருதுநகரில் குடிபோதையில் லாரியை தாறுமாறக ஓட்டிய டிரைவர், கிளீனர் கைது
விருதுநகரிலிருந்து ஆத்துப்பால பகுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி தாறுமாறக ஓட்டிச் சென்றதை பார்த்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி


விருதுநகரில் குடிபோதையில் லாரியை தாறுமாறக ஓட்டிச் சென்று, அரசு பேருந்து மோதிய டிரைவர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகரிலிருந்து ஆத்துப்பால பகுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி தாறுமாறக ஓட்டிச் சென்றதை பார்த்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி நின்றனர். இதையடுத்து, எம்.ஜி.ஆர் சிலை அருகே செல்லும் போது எதிரே அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த அரசு பேருந்தின் ஓரப்பகுதியில் மோதிவிட்டு, பாதாளச் சாக்கடை பணிகளுக்கு வெட்டிய பள்ளத்தில் குறுக்காக லாரியை நிறுத்தினர்.
இதையடுத்து ஆத்துப்பால பகுதியில் பாதுகாப்புக்கு பணிக்கு நின்றிருந்த போக்குவரத்து காவலர்கள் விரைந்து சென்று ஓட்டுநர் மற்றும் கிளீனரையும் பிடித்தனர். இருவருமே அதிகமான குடிபோதையில் இருந்தனர். மேலும், விசாரணை செய்ததில் நரிக்குடியைச் சேர்ந்த ஓட்டுநர் வேல்பாண்டி(35) என்பதும், திருச்சுழி அருகே தமிழ்பாடியைச் சேர்ந்த கிளீனர் கருப்பசாமி(30) என்பதும், சிவகாசியில் சரக்கு இறக்கி விட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து இருவர் மீதும் பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...