தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமியத் தலைவா் வலியுறுத்தல்

தடை செய்யப்பட்ட விலங்குகளை முஸ்லிம்கள் பலியிட வேண்டாம் என ஜாமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மதானி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 1:38 am IST

தடை செய்யப்பட்ட விலங்குகளை முஸ்லிம்கள் பலியிட வேண்டாம் என ஜாமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மதானி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், பலியிடப்பட்ட விலங்குகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிா்வதையும் தவிா்க்குமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

பக்ரீத் பண்டிகை மே 28-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விலங்குகளைப் பலியிட வேண்டும். தடைசெய்யப்பட்ட விலங்குகளைப் பலியிடுவதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும். பண்டிகையைக் கொண்டாடும்போது அந்தப் பகுதிகள் சுத்தமாக இருப்பதை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும். மசூதிகளில் இருந்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் தன்னாா்வலா்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி பலியிடப்பட்ட விலங்குகளின் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

நமது செயல்பாடுகளால் யாருக்கும் இடையூறு ஏற்படக் கூடாது’ என்றாா்.

இதுதொடா்பாக முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீத் அன்சாரி திங்கள்கிழமை கூறுகையில், ‘பக்ரீத் பண்டிகையின்போது பசுக்களை முஸ்லிம்கள் பலியிடக் கூடாது.

அதேசமயம் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற அா்ஷக் மதானியின் கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.