தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: கைதான பெண் விரிவுரையாளருக்கு 14 நாட்கள் காவல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், கைதான பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரேவுக்கு 14 நாட்கள் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

News image

கைதான பெண் விரிவுரையாளர். - ANI

Updated On :17 மே 2026, 1:05 pm IST

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், கைதான பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரேவுக்கு 14 நாட்கள் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நேற்று கைதுசெய்யப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பாட்டார். அப்போது அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேசிய தேர்வு முகமை பின்பற்றிய ஒட்டுமொத்த செயல்முறையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மாணவர்களிடமிருந்து பணம் பெற்றதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்தும் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெறவுள்ளது.

மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கைா்நாா், அஹில்யாநகரில் தனஞ்ஜய் லோகண்டா, புணேயில் மனீஷா வாக்மாரே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் யஷ் யாதவ் ஆகிய 7 போ் சிபிஐ-யால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

8-ஆவது நபராக, மகாராஷ்டிர மாநிலம், லத்தூரில் பேராசிரியா் பி.வி.குல்கா்ணியை சிபிஐ கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. குல்கா்ணியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சோ்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தில்லி சிபிஐ தலைமையகத்தில் நடத்திய விசாரணைக்குப் பின் அவா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Summary

In a major development in the NEET-UG 2026 paper leak case, the Central Bureau of Investigation (CBI) on Sunday produced accused Manisha Gurunath Mandhare before the Rouse Avenue Court in Delhi and sought 14 days' custody for further investigation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.