தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் மாணவி தற்கொலை! பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகள்!

நீட் மாணவி தற்கொலை விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் காங்கிரஸ் கேள்வி

News image

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகள்

Updated On :4 ஜூன் 2026, 2:41 pm IST

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வெழுதிய மாணவி ஒருவர் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டார். மேலும், தற்கொலைக் கடிதத்தில் அவர் கூறியதாவது, என்னை மன்னித்து விடுங்கள்.. மீண்டும் ஒருமுறை நீட் தேர்வெழுத எனக்கு தைரியமில்லை என்று தெரிவித்திருந்தார்.

மாணவியின் தற்கொலை குறித்து பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பிய காங்கிரஸ், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "நீட் வினாத்தாள் கசிந்ததால், 18 வயதேயான ஆகாங்ஷா சதுர்வேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு மருத்துவராகச் சேவையாற்ற விரும்பிய நிலையில், அவரது கனவை வினாத்தாள் கசிவு கலைத்து விட்டது.

வினாத்தாள் கசிவால், மாணவியின் குடும்பம் வாழ்நாள் துன்பத்தை அடைந்துள்ளது. ஆகாங்ஷாவை மருத்துவராக்குவதற்காக, விவசாயியான அவரது தந்தை ரூ. 3 லட்சம் கடன் பெற்றதுடன், சமையல்காரராகவும் பணிபுரிந்து வந்தார். இருந்தபோதிலும், அவர்களிடமிருந்து அவர்களின் மகளை வினாத்தாள் கசிவு பறித்துக் கொண்டது.

நீட் வினாத்தாள் கசிவால் 6 குழந்தைகள் பலியானபோதிலும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவே இல்லை.

இது தற்கொலை அல்ல; ஊழல் நிறைந்த அரசால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொலை. பிரதமர் மோடியும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும்தான் இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பு.

வினாத்தாள் கசிவு குறித்து அரசுக்கு நாடு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

நீட் வினாத்தாள் கசிவால் இன்னும் எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படவிருக்கின்றனர்?

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பிரதமர் மோடி ஏன் பாதுகாக்கிறார்?

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எப்போதுதான் தண்டிக்கப்படுவர்?

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எப்போது பதவிலியிருந்து விலக்கப்படுவார்?" என்று கூறியுள்ளனர்.

Summary

NEET Paper Leak: Congress slams PM Modi after aspirant's suicide

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.