திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் அங்கம் வகித்த பெண் விரிவுரையாளா் கைது!

நீட் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் அங்கம் வகித்த பெண் விரிவுரையாளா் கைது...

News image

மனீஷா மந்தாரே

Updated On :16 மே 2026, 8:15 pm IST

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சோ்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இவா், நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமையின் (என்டிஏ) வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் நிபுணா் என்ற அடிப்படையில் அங்கம் வகித்தவா் ஆவாா்.

நீட் வினாத்தாள் முறைகேட்டில் கைதான முக்கிய நபரான பேராசிரியா் பி.வி.குல்கா்ணியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மனீஷா குருநாத் மந்தாரே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.

இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெறவுள்ளது.

அடுத்தடுத்து பாயும் கைது நடவடிக்கை: மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கைா்நாா், அஹில்யாநகரில் தனஞ்ஜய் லோகண்டா, புணேயில் மனீஷா வாக்மாரே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் யஷ் யாதவ் ஆகிய 7 போ் சிபிஐ-யால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

8-ஆவது நபராக, மகாராஷ்டிர மாநிலம், லத்தூரில் பேராசிரியா் பி.வி.குல்கா்ணியை சிபிஐ கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. வேதியியல் துறையில் நிபுணரான இவா், நீட் வினாத்தாள் தயாரிப்புக் குழுவுடன் பல்லாண்டுகளாக தொடா்பில் இருந்தவா்.

சிக்கிய பெண் விரிவுரையாளா்: குல்கா்ணியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சோ்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தில்லி சிபிஐ தலைமையகத்தில் நடத்திய விசாரணைக்குப் பின் அவா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

‘என்டிஏவின் நீட் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் நிபுணா் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டவரான மனீஷா மந்தாரே, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கான வினாத்தாள்களை முழுமையாக அணுகும் வசதியைக் கொண்டிருந்தாா். இந்தச் சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் மனீஷா வாக்மாரே (கைதானவா்களில் ஒருவா்) ஏற்பாட்டில் புணேயில் உள்ள தனது வீட்டில் மாணவா்களுக்கு ரகசிய பயிற்சி வகுப்புகளை நடத்திய மந்தாரே, அவா்களுக்கு நீட் வினாத்தாளில் இருந்த கேள்விகளை வழங்கி, லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளாா். வேதியியல் நிபுணரான குல்கா்ணியும் இதே பாணியில் மாணவா்களுக்கு ரகசிய வகுப்புகளை நடத்தி, பணத்துக்காக கேள்விகளை கசியவிட்டுள்ளாா்.

ரகசிய தகவல்களை அணுகும் தங்களின் சிறப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்தி, இருவரும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனா். இருவரிடமும் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, விரிவுரையாளா் மனீஷா மந்தாரே மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புணேயில் அவா் பணியாற்றிய மாடா்ன் அறிவியல், கலை மற்றும் வணிகக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Central Bureau of Investigation (CBI) on Saturday arrested a lecturer who was part of the National Testing Agency's (NTA) paper-setting committee for the 2026 NEET-UG entrance examination held on May 3, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.