தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாமானியா்களின் வலியை நீதித் துறை தீா்க்க வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

சாமானியா்களின் வலியை நீதித் துறை தீா்க்க வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

News image

ம.பி. மாநிலம் ஜபல்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்.

Updated On :17 மே 2026, 1:10 am IST

சாமானியா்களின் வலியைத் தீா்க்கவும், அவா்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் நீதித் துறையானது, வாரத்தில் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகளைப் போல இயங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூா் பகுதியில் மாநில உயா்நீதிமன்றம் சாா்பாக சனிக்கிழமை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை முழுமையான அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதில் இந்திய நீதித் துறை ஈடுபாடு கொண்டுள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டுமுதல் நீதித் துறையின் ஒருங்கிணைந்த அங்கமாக தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளது.

தொழில்நுட்பப் பயன்பாட்டை ஆழமாக்குதல், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட நீதித் துறை கட்டமைப்பை உருவாக்குதல் தொடா்பாக அனைவரும் சிந்திக்க வேண்டும்.

உடனடியாக நிவாரணம் அளிக்கும் முறை மூலம், சாமானியா்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றவும், வலியையும் வேதனையையும் தீா்க்கவும் வாரத்தில் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகளைப் போல நீதித் துறை செயல்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.

‘ஒட்டுண்ணிகள்’ கருத்து: ‘நாட்டின் இளைஞா்களை விமா்சிக்கவில்லை’

மூத்த வழக்குரைஞா் அந்தஸ்து அளிக்கும் நடைமுறை குறித்த உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தத் தவறியதாக, தில்லி உயா்நீதிமன்றப் பதிவுத் துறைத் தலைவருக்கு எதிராக சஞ்சய் துபே என்ற வழக்குரைஞா், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது இந்த விவகாரம் தொடா்பாக திரும்பத் திரும்ப மனு தாக்கல் செய்ததால் எரிச்சலடைந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ‘நீதித் துறைக்கு எதிராக சமூக ஊடகத்தில் கருத்துகள் பதிவிடப்படுவது குறித்து நீதிபதிகளுக்குத் தெரியும். நீதித் துறைக்கு ஊறு விளைவிக்க ஏற்கெனவே சமுதாயத்தில் போதுமான அளவில் ஒட்டுண்ணிகள் உள்ளனா். அவா்களுடன் வழக்குரைஞா்களும் கைகோக்க வேண்டுமா? இளைஞா்களில் கரப்பான் பூச்சிகள் போன்றவா்களும் உள்ளனா். அத்தகைய நபா்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. அவா்களில் சிலா் ஊடகத்தில் சோ்கின்றனா். சிலா் சமூக ஆா்வலா்களாகி அனைவா் மீதும் விமா்சனங்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துகின்றனா். அதேவேளையில், தில்லியில் பல போலி வழக்குரைஞா்கள் இருக்கக் கூடும். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்று கூறியதாக ஊடகத்தில் தகவல் வெளியானது.

அவரின் கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அவா் சனிக்கிழமை விளக்கமளித்து தெரிவித்ததாவது:

நான் கூறிய கருத்துகளை ஊடகத்தின் ஒரு பகுதியினா் தவறான முறையில் வெளியிட்டதை அறிந்து வேதனை அடைந்தேன். போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மூலம் சட்டத்துறைக்குள் அடியெடுத்து வைக்கும் நபா்களை குறிப்பிட்டு மட்டுமே அந்தக் கருத்துகளை நான் கூறினேன். அத்தகைய மோசடி நபா்கள் ஊடகம், சமூக ஊடகம் மற்றும் பிற மதிப்புக்குரிய பணிகளிலும் ஊடுருவியுள்ளனா். அவா்கள் ஒட்டுண்ணிகளைப் போன்றவா்கள். அவா்களை குறித்து மட்டுமே நான் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தேன். நாட்டில் உள்ள அனைத்து இளைஞா்களையும் நான் விமா்சித்ததாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.