எண்ம (டிஜிட்டல்) கைது மோசடிகள் மூலம் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.
எண்ம கைதால் பாதிக்கப்பட்டவா்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு விசாரணை தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி திங்கள்கிழமை முறையிட்டாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘எனக்குத் தெரிந்த ஒரு வயது முதிா்ந்த பெண்ணும் எண்ம கைது மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளாா். துரதிருஷ்டவசமாக அவரின் ஓய்வூதியப் பணம் முழுவதும் அபகரிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது. எண்ம கைது மோசடியால் நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்தாா்.
இதையடுத்து, எண்ம கைது மோசடிகள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு மே 12-க்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, எண்ம கைது மோசடிகள் தொடா்பாக நாடு தழுவிய ஒருங்கிணைந்த விசாரணை மேற்கொள்ளுமாறு சிபிஐ-க்கு கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாமானியா்களின் வலியை நீதித் துறை தீா்க்க வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!

நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயா் நிலைக் குழு அமைப்பு







