குவைத் விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் நாளை (ஜூன் 5) இந்தியா வந்தடையும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், குவைத் விமான நிலையத்தின் மீது கடந்த புதன்கிழமை (ஜூன் 3) அன்று நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், கொல்லப்பட்ட இந்தியரின் உடல் நாளை இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் (வளைகுடா நாடுகள்) அசீம் ஆர் மஹாஜன் இன்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“குவைத்தில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் நாளை இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்துள்ள 13 இந்தியர்களும் குவைத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர் தொடங்கியது முதல் வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களில் இதுவரை 10 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Ministry of External Affairs has announced that the body of the Indian national killed in the attack on Kuwait Airport will arrive in India tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குவைத் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் பலி! மத்திய அரசு கண்டனம்!

குவைத் விமான நிலையம் மீதான ஈரானின் தாக்குதலில் பலியானவர் இந்தியர்!

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!








