திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!

குவைத் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது குறித்து...

News image

குவைத்தில் மீண்டும் விமானங்கள் இயக்கம்... - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:55 pm IST

ஈரான் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்த குவைத் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்க படைகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அன்று தாக்குதல் நடத்தின.

இதனைத் தொடர்ந்து, பதிலடியாக வளைகுடா நாடான குவைத்திலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில், குவைத்தின் சர்வதேச விமான நிலையம் கடுமையாகச் சேதமடைந்ததுடன் ஒருவர் பலியானார்.

இந்த நிலையில், தாக்குதலில் உருகுலைந்ததாகக் கூறப்பட்ட குவைத் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 3) மீண்டும் குறிப்பிட்ட விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் மட்டும் தாக்குதலில் பாதிக்கப்படாத மற்றொரு விமான முனையத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Flight operations have resumed at the Kuwait airport, which was severely damaged in the Iranian attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.