திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!

ஏப்.19-ல் தென் கொரியா அதிபர் லீ ஜே மியங் இந்தியா வருவது குறித்து...

News image

தென் கொரிய அதிபர் லீ ஜே மியங் - AP

Updated On :16 ஏப்ரல் 2026, 5:20 pm IST

தென் கொரியா நாட்டின் அதிபர் லீ ஜே மியங் அரசு முறைப் பயணமாக வரும் ஏப். 19 அன்று இந்தியாவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய அதிபர் லீயின் 3 நாள் இந்திய பயணத்தில் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த நிலையில், தென் கொரிய அதிபர் லீ வரும் ஏப். 20 அன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடுகிறார். இந்தச் சந்திப்பில், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா மற்றும் தென் கொரியா நாடுகள் இணைந்து கப்பல் கட்டுமானம், கடல்சார் தொழிற்சாலைகள், நிதி, செய்யறிவு (ஏஐ) மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், தில்லியில் நடைபெறவுள்ள இருநாடுகளைச் சேர்ந்த முக்கிய கார்ப்பரேட் செயல் தலைவர்கள் பங்கேற்கும் தொழில் கூட்டத்தில் அதிபர் லீ கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய பயணத்தை நிறைவு செய்து அதிபர் லீ, மற்றொரு தென்கிழக்கு ஆசிய நாடான வியத்நாமுக்குச் செல்கிறார்.

ஏற்கெனவே, இந்தியாவின் பல்வேறு துறைகளில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 8.6 ஆயிரம் கோடி (929 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்பில் தென் கொரியா அரசு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

South Korean President Lee Jae-myung will visit India on April 19 on an official state visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.