திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெனிசுவேலா இடைக்கால அதிபர் நாளை இந்தியா வருகிறார்! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தியா வருவது குறித்து...

News image

வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 6:01 pm IST

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோரைக் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க படைகள் நாடு கடத்திச் சென்றன. பல்வேறு குற்றவழக்குகள் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவர் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராகப் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வரும் ஜூன் 3 ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருவதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, வரும் ஜூன் 6 ஆம் தேதி வரையிலான டெல்சி ரோட்ரிக்ஸின் இந்திய பயணத்தில் வெனிசுவேலாவின் முக்கிய அமைச்சர்களும் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அதிபர் டெல்சி இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

வெனிசுவேலாவின் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்திருந்தார்.

பின்னர், துணை அதிபராகப் பதவி வகித்தபோது கடந்த 2019, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இந்திய பயணத்தை மேற்கொண்ட டெல்சி ரோட்ரிக்ஸ் 6 ஆவது முறையாக நாளை இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Venezuela's Interim President Delcy Rodríguez, will be visiting India on an official visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.