திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியா வந்தார் வெனிசுவேலா இடைக்கால அதிபர்!

வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தியா வந்துள்ளது குறித்து...

News image

வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தியா வந்தார்... - IANS

Updated On :3 ஜூன் 2026, 10:06 pm IST

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை (ஜூன் 3) மாலை இந்தியா வந்தடைந்தார். 5 நாள் பயணமாக தலைநகர் தில்லுக்கு வந்த அதிபர் டெல்சி பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

இந்தப் பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கும் அதிபர் டெல்சி எரிசக்தி, பாதுகாப்பு, முதலீடு, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இத்துடன், வெனிசுவேலாவின் வெளியுறவு, பொருளாதாரம், நிதி, அறிவியல், தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிபர் டெல்சியுடன் இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்க படைகளால் நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.

ஏற்கெனவே, 2015, 2019, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இந்திய பயணத்தை மேற்கொண்ட டெல்சி ரோட்ரிக்ஸ் 6 ஆவது முறையாக இன்று இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Venezuela's Acting President Delcy Rodriguez has arrived in India on an official visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.