கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நீட் ஆள்மாறாட்டம்.. எய்ம்ஸ் மாணவரைக் காட்டிக்கொடுத்தது எது?

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:17 pm

DIN

புது தில்லி: இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மருத்துவத் துணைத் தேர்வு எழுத, கல்லூரி வளாகத்துக்கு வந்திருந்த நரேஷ் வாஷ்னோய் கைது செய்யப்பட்டார். இவரும், இவரது உதவியாளரும், நீட் தேர்வு எழுத பயிற்சி எடுத்து வரும் மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு பதிலாக தேர்வெழுதி மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நீட் நுழைவுத் தேர்வை உண்மையானது போல போலியாகத் தயாரித்து இவர்கள் மோசடி செய்ய முயற்சி செய்தாலும், தேர்வறைக்குள், பையோ மெட்ரிக் முறையில் மாணவர்களை சோதித்தபோது, பையோ மெட்ரிக் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவருடன் ஒத்துப்போகாததால், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு உதவியாக இருந்து வந்தவர் கடந்த மே மாதமே கைது செய்யப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாக இருந்து வந்தார். தில்லியில் நேற்று இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.

அதாவது, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயலும் மாணவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு, நீட் தேர்வெழுதும் மாணவர்களிடம், தாங்கள் தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற்றுத் தருவதாகக் கூறி 5-7 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு மாணவரிடமும் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு பதிலாக தேர்வெழுதி மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 7ஆம் தேதி தில்லியில் ஒரு நீட் தேர்வு மையத்தில், அமன் குமார் என்ற மாணவரின் பையோ மெட்ரிக் ஒத்துப்போகவில்லை என்று காவல்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து, விரைந்து சென்று அமன் குமார் பெயரில் தேர்வெழுத வந்தவரை விசாரித்த போது, அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சு யாதவ் என்பதும், எய்ம்ஸ் மருத்துவமனையில் பிஎஸ்சி ரேடியோ-டையக்னாசிஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. வைஷ்ணோய் என்பவர் தான் தனக்கு ரூ.6 லட்சம் கொடுப்பதாகக் கூறி நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதுமாறு கூறியதாகவும் ஒப்புக் கொண்டார்.

அப்போதுதான் இந்த கும்பல் குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  அது முதல் வைஷ்ணோய் தேடப்பட்டு வந்த நிலையில், மற்றொரு மோசடி செய்த போது கைதாகியிருக்கிறார். அவரது சொந்த ஊர் கொல்கத்தா என்பதும் தெரிய வந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.