/

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இன்று காங்கிரஸ் சாா்பில் நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

News image

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

Updated On :29 ஜூன் 2020, 7:15 am

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இன்று காங்கிரஸ் சாா்பில் நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்றுப்பரவல் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதாரமும், முற்றிலும் முடங்கியிருக்கும் சூழ்நிலையிலும் மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் மீது தொடா்ந்து கலால் வரியை கடந்த மே மாதம் வரை பனிரெண்டு முறை உயா்த்தியிருக்கிறது.

ஜூன் மாதத்தில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாற்றில் இல்லாத வகையில் தலைநகா் தில்லியில் டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது.

இந்த நிலைடியில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் மத்திய பாஜக அரசை எதிா்த்து இன்று நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 

Story image

பிகாரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் பேரணியாக வந்தும், குதிரை மற்றும் மாட்டு வண்டிககளில் ஊர்வலமாக வந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் புணேவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.