மும்பை: அதிகரித்து வரும் கரோனா பரவலின் காரணமாக மும்பையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தலைநகரான மும்பையில் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது.
ஜூன் 30-ஆம் தேதி நிலவரத்தின்படி 28, 473 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4, 554 பேர் மரணமடைந்துள்ளனர். அதே நேரம் 44,170 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் கரோனா பரவலின் காரணமாக மும்பையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக மும்பை மாநகர காவல்துறை இணை ஆணையர் பிரணயா அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மும்பை நகராட்சி அதிகாரிகளால தடை செய்யப்பட்ட பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவது தடை செய்யப்படுகிறது. முன்னதாக விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிப்பு வரும்வரை இந்த தடையுத்தரவானது வரும் 15-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதேநேரம் அத்தியாவசிய பணிகள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக செல்வோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


