சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடியூரப்பா திட்டவட்டம்

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:02 pm

Raghavendran

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமையும் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நான் பார்த்தேன். அதில் பாஜக 125 முதல் 130 இடங்கள் வரை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியால் 70 இடங்களில் கூட வெல்ல முடியாது. ஜேடிஎஸ் 25 இடங்கள் வரை வெற்ற பெறலாம்.

இங்கு பாஜக-வுக்கு ஆதரவாக அமைதியான மற்றும் அதிக சக்தியுடன் கூடிய வல்லமை ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மற்றும் சித்தராமையாவுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் கோபத்தின் வெளிப்பாடு ஆகும். இது வருகிற மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். அதோடு கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் தூக்கி ஏறியப்படும்.

இதை நான் மட்டும் கூறவில்லை. இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை காங்கிரஸும் நன்கு அறியும். கர்நாடகாவில் தொங்கு சட்டப் பேரவை அமையுமா என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை. பாஜக-வின் ஆட்சி தான் அமையும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். 

கர்நாடக தேர்தல் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், என்னுடனும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அவர்களுடனும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். இங்கு வெற்றிபெறுவோம் என்பதில் நாங்கள் அனைவருமே நம்பிக்கையுடன் உள்ளோம். மே 17-ல் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கப்போவது 100 சதவீதம் உறுதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.